தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

10 மாநிலங்களில் கரோனா தினசரி பாதிப்பு அதிகரிப்பு - தினசரி கரோனா பாதிப்பு அதிகரிப்பு

மகராஷ்டிரா, டெல்லி, சத்தீஸ்கர், தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

India reports 1,61,736 new COVID19 cases
India reports 1,61,736 new COVID19 cases

By

Published : Apr 13, 2021, 11:27 AM IST

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால், பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 736 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 36 லட்சத்து 89 ஆயிரத்து 453 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த 97 ஆயிரத்து 168 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருவோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 22 லட்சத்து 53 ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரேநாளில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் 879 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து, கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 58ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை நாட்டில் 10 கோடியே 85 லட்சத்து 33 ஆயிரத்து 85 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதுமட்டுமின்றி, மகராஷ்டிரா, டெல்லி, சத்தீஸ்கர், தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், இந்த 10 மாநிலங்களில் 80.8 விழுக்காடு கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details