பட்டியலின சமூகத்தை சேர்ந்த 11, 12ஆம் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 18,000 ரூபாய் உதவித் தொகையை மத்திய அரசு வழங்கிவருகிறது. அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளதாக தகவல் வெளியானது. கடந்த ஓராண்டாக, திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதற்கு ஒப்புதல் வழங்காமல் மத்திய அமைச்சரவை காலம் தாழ்த்திவந்துள்ளது.
தலித்துகளுக்கு கல்வியை மறுக்கும் பாஜக/ஆர்எஸ்எஸ் - ராகுல் விமர்சனம்
டெல்லி: பட்டியலின மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், தலித்துகளுக்கு கல்வியை மறுப்பதே பாஜக/ஆர்எஸ்எஸ் ஆகியோரின் நோக்கமாக உள்ளது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ராகுல்
இதனை கடுமையாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, தலித்துகளுக்கு கல்வியை மறுப்பதே பாஜக/ஆர்எஸ்எஸ் ஆகியோரின் நோக்கமாக உள்ளது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பழங்குடி, தலித் மக்களுக்கு கல்வியை மறுப்பதே பாஜக/ஆர்எஸ்எஸ் ஆகியோரின் நோக்கமாக உள்ளது.
எஸ்சி-எஸ்டி மாணவர்களுக்கான உதவித் தொகையை நிறுத்திவைத்திருப்பது அவர்களின் கல்விக்கு முடிவு கட்டுவதற்கான செயல்" என பதிவிட்டுள்ளார்.