புல்வாமா: தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அரசு நிலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் பயங்கரவாதியின் வீட்டை அதிகாரிகள் இன்று (டிசம்பர் 10) இடித்து தரைமட்டமாக்கினர். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு உள்ள கோட்லி பகுதியில் பயங்கரவாதி ஆஷிக் நெங்ரோ என்பவருக்கு சொந்தமான 2 மாடி வீடு, அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் வருவாய் துறையினர் போலீசார் உதவியுடன் புல்டோசர் மூலம் வீட்டை இடித்துள்ளனர்.
காஷ்மீரில் பயங்கரவாதிக்கு சொந்தமான வீடு இடிப்பு - latest tamil news
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் சம்பத்தப்பட்ட பயங்கரவாதிக்கு சொந்தமாக வீட்டை காவல்துறையினர் இடித்து தரமட்டமாக்கினர்.
காஷ்மீரில் முதல்முறையாக இடிக்கப்பட்ட பயங்கரவாதியின் வீடு
'பயங்கரவாதி' என்று அறிவிக்கப்பட்ட 34 வயதான ஆஷிக் நெங்ரோவிற்கு கடந்த 2019ஆம்ஆண்டு பிப்ரவரி 14, அன்று 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தற்கொலைத் தாக்குதலில் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. காஷ்மீர் வரலாற்றில் பயங்கரவாதி ஒருவரின் வீடு புல்டோசர் மூலம் தகர்க்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கிரைம் சீரியல் பார்த்து கணவரை கொன்ற கொடூர மனைவி கைது
Last Updated : Dec 10, 2022, 10:16 PM IST