ஸ்ரீநகர்: மின்சார வாகன பேட்டரி தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் உலோகம், டன் கணக்கிலான அளவில் ஜம்மு காஷ்மீர் நிலத்தடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இரும்பு அல்லாத உலோகமான லுத்தியம், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் முக்கிய கூறாக விளங்குகிறது. ரியாசி மாவட்டத்தில் உள்ள சலல் ஹய்மனா பகுதியில், 59 லட்சம் டன் அளவிலான லித்தியம் போன்ற உலோகத்தை இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்து உள்ளதாக மத்திய கனிமவளத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுரங்கம் மற்றும் கனிமவளம் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "லித்தியம், தங்கம் உள்ளிட்ட 51 கனிமவளங்கள் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அது குறித்த தகவல்கள் அந்தந்த மாநில அரசுகளிடம் வழங்கப்பட்டு வருகிறது.