கேரளாவில் 140 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பினராயி விஜயன் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 45-க்கும் குறைவான இடங்களே கிடைத்துள்ளன. தர்மடம் தொகுதியில் போட்டியி்ட்ட முதலமைச்சர் பினராயி விஜயன் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சட்டப்பேரவைக்குள் முதன்முறையாக நுழையும் மாமனார் - மருமகன்!
திருவனந்தபுரம்: கேரள வரலாற்றில் முதன்முறையாக முதலமைச்சர் பினராயி விஜயனும், அவரது மருமகனும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்குள் நுழைகின்றனர்.
திருவனந்தபுரம்
இந்தநிலையில், பேப்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் பினராயி விஜயனின் மருமகன் பி.ஏ.முகமது ரியாஸ் வெற்றிபெற்று அசத்தியுள்ளார். கேரள வரலாற்றில், முதன்முறையாக சட்டப்பேரவைக்குள் முதலமைச்சர் பினராயி விஜயனும், அவரது மருமகள் முகமது ரியாஸூம் கால்பதிக்கின்றனர்.
முன்னதாக, கடந்த 2009இல் கோழிக்கோடு தொகுதியில் போட்டியிட்ட ரியால் தோல்வியடைந்தார். அதன்பின்பு, தற்போது 2020இல் பினராயின் மகள் வீணாவை திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.