அமராவதி:ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகள் கரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. ஊரடங்கிற்கு முன்னதாக, நாளொன்றுக்கு ரூ. 3 கோடிக்கும் அதிகமாக உண்டியல் நன்கொடை கிடைந்ததுவந்தது.
இந்தளவு நன்கொடை இரண்டு ஆண்டுகளாக கிடைக்கவில்லை. இந்தாண்டு முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் உண்டியல் காணிக்கை உயரத்தொடங்கியுள்ளது. இருப்பினும் பல்வேறு தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கியாதால், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.1,500 கோடி கோயில் நிர்வாகத்திற்கு கிடைத்துள்ளது.