மகாராஷ்டிர மாநிலம் சங்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சச்சின் மகாதேவ் சிமூர். மும்பை நகரில் மென்பொறியாளராக பணிபுரிந்துவரும் இவர், கோவிட்-19 பரவல் காரணமாக 15 நாள்களுக்கு முன்னர் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
இவர் வீடு திரும்பிய சில நாள்களிலேயே இவரது தந்தை மகதேவ் சீமூர், தாயார் சுஷில் சிமூருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இருவரும் ஒரு வாரமாக சிகிச்சைப் பெற்று வந்த சூழலில், மகன் சச்சினுக்கும் கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று (மே.19) காலை தந்தை மகாதேவ் சிமூர் உயிரிழந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மாலை ஐந்து மணி அளவில் தாயாரும், அடுத்த ஒரு மணி நேரத்தில் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். கோவிட் தொற்றால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் 13 மணி நேர இடைவெளியில் உயிரிழந்த துயர சம்பவம் சங்லி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:'பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும்' - பிரதமருக்கு சோனியா கடிதம்