தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

செப்டம்பர்-13 முக்கிய தகவல்கள் #EtvBharatNewsToday - பூபேந்திர படேல்

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

news today
news today

By

Published : Sep 13, 2021, 6:58 AM IST

1. சட்டப்பேரவையில் இன்று

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப். 13) திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத் துறை; சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, மாநில சட்டப்பேரவை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, மனிதவள மேலாண்மைத் துறை ஆகியவற்றின் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறவுள்ளது.

கலைவாணர் அரங்கம்

2. நீட் தேர்வு விலக்கு: இன்று புதிய மசோதா

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வகையில் புதிய சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

3.இளநிலை கல்வியியல்சேரஇன்று முதல் விண்ணப்பம்

தமிழ்நாட்டில் இளநிலை கல்வியியல் (B.Ed) பட்டப்படிப்பில் சேர மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

4. குஜராத்தில் புதிய முதலமைச்சர் பதவியேற்பு

குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூபேந்திர படேல் இன்று பதவியேற்கவுள்ளார். முன்னதாக, முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி நேற்று முன்தினம் (செப். 11) பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

பூபேந்திர படேல்

5. இன்றைய வானிலை

தென்மேற்குப் பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாகஇன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை

ABOUT THE AUTHOR

...view details