1. நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறவுள்ளது. இதில், நாடு முழுவதும் மொத்தம் 16.14 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர்.
தமிழ்நாட்டில் 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நடைபெறும் இத்தேர்வில் 1 லட்சத்தது 12 ஆயிரத்து 889 மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர்.
2. நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி வருகை
பாரதியார் நினைவு நுற்றாண்டு விழாவிலும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழாவிலும் கலந்துகொள்ள ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தூத்துக்குடிக்கு வருகை தருகிறார்.
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 3. வெங்கய்யா நாயுடு புதுச்சேரி வருகை
மூன்று நாள் பயணமாக துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று புதுச்சேரி வருகிறார்.
துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு 4. இன்றைய வானிலை
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள உள்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை போன்ற இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும்.
5. வரலாறு படைப்பாரா ஜோகோவிச் ?
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை (செப். 12) அதிகாலை 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டியில் இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ் உடன் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் மோதுகிறார்.