பாரதியார் நினைவு நூற்றாண்டு
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நூறாவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. மேலும், இனி ஆண்டுதோறும் பாரதியாரின் நினைவு நாள் 'மகாகவி நாள்'ஆக கடைப்பிடிக்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
9/11 - 20ஆம் ஆண்டு நினைவு நாள்
அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு இதே நாளில் புகழ்பெற்ற இரட்டை கோபுரம் பயங்கரவாதிகளால் விமானம் மூலம் தகர்க்கப்பட்டது. இதில் ஏற்றத்தாழ மூன்றாயிரம் பேர் உயிரிழந்த நிலையில், இன்றைய நாள் 21ஆம் நூற்றாண்டின் கறுப்பு நாளாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
சர்தார்தம் பவன் புது கட்டடம் திறப்பு
பின்தங்கிய பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான தொழிற்பயிற்சி அளிக்க, குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார்தம் பவனில் புதிய கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. இங்கு இரண்டாயிரம் மாணவியர் தங்குவதற்கான விடுதியும் கட்டப்பட உள்ளது. இந்தக் கட்டடங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று திறந்துவைக்கிறார்.
அமெரிக்க ஓபன்: மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி அமெரிக்காவில் இன்று (இந்திய நேரப்படி செப். 12 நள்ளிரவு 1.30 மணி) தொடங்குகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுக்கானு, கனடாவின் லேலா அன்னி பெர்னாண்டஸ் உடன் மோத உள்ளார்.
இலங்கிலாந்து டென்னிஸ் வீராங்கனை எம்மா ரடுக்கானு