தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு - மழைக்கு வாய்ப்பு

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பை காணலாம்.

Important events to look for today News Today இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு மம்தா பானர்ஜி டெல்லி நடமாடும் தடுப்பூசி திட்டம் இன்றைய ஐபிஎல் போட்டி மழைக்கு வாய்ப்பு இன்றைய நிகழ்வுகள்
Important events to look for today News Today இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு மம்தா பானர்ஜி டெல்லி நடமாடும் தடுப்பூசி திட்டம் இன்றைய ஐபிஎல் போட்டி மழைக்கு வாய்ப்பு இன்றைய நிகழ்வுகள்

By

Published : Apr 11, 2021, 6:19 AM IST

  1. மம்தா பானர்ஜி ஊர்வலம்: மேற்கு வங்கத்தில் வாக்காளர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை கண்டித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று (ஏப்.11) பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
    மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
  2. நடமாடும் தடுப்பூசி திட்டம்: கோவை மாநகரப் பகுதிகளில் நடமாடும் தடுப்பூசித் திட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.11) முதல் தொடங்கப்படுகிறது.
    கரோனா தடுப்பூசி
  3. டெல்லியில் புதிய விதிகள் அமல்: தலைநகர் டெல்லியில் கரோனா பாதிப்பாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி மகாராஷ்டிரா சென்று டெல்லி திரும்பும் நபர்களும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மற்றும் 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விதிகள் கட்டாயமாக்கப்படுகின்றன.
    கோவிட் பரிசோதனை
  4. வேலூரில் புதிய கட்டுப்பாடுகள்: கரோனா பரவல் காரணமாக வேலூரில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதனை மாவட்ட ஆட்சியர் அ. சண்முக சுந்தரம் உறுதிப்படுத்தியுள்ளார்.
    கரோனா வைரஸ்
  5. திருச்சியில் குடிநீர் வராது: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சஞ்சீவி நகர், விறகுப்பேட்டை, ஜெகநாதபுரம், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது.
    தண்ணீர்
  6. தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: தென் தமிழ்நாடு அதனையொட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று லேசான இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
    மழைக்கு வாய்ப்பு
  7. இன்றைய ஐபிஎல் போட்டி: சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. ஆட்டம் மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
    ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா

ABOUT THE AUTHOR

...view details