- முப்படை வீரர்களின் தியாகத்தையும், சேவையையும் போற்றும் விதமாக இன்று கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள செய்தியில், “இந்த இனிய நாளில், முப்படை வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நமது முப்படை வீரர்களின் தன்னலமற்ற சேவையை போற்றும் வகையிலும், நம் தேச பக்தியை வெளிப்படுத்தும் வகையிலும், கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதியினை வழங்கிட வேண்டுமென அனைவரையும் நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
- சென்னை புறநகர் ரயில் சேவையின் ரயில் எண்ணிக்கை இன்று முதல், 244 லிருந்து 320 ஆக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது.
- ஆந்திராவின் சித்தூர் கலவ குண்டா அணையிலிருந்து சுமார் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் பொன்னை அணைக்கட்டு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இப்பகுதிகளில் குழந்தைகள், பெரியவர்கள் குளிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- காங்கிரஸிலிருந்து விலகிய நிலையில் நடிகை விஜயசாந்தி ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்நிலையில் இன்று (திங்கள்கிமை) அவர் முறைப்படி தன்னை பாஜகவில் இணைத்துக்கொள்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
- மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள்,விவசாயசங்கத்தினர் டெல்லிக்குள் நுழையும் போராட்டத்தை நவம்பர் 26ஆம் தேதி முதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை மறுதினம் (டிச9) தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குடியரசுத் தலைவரை சந்தித்து பேசுகிறார்.
ஈடிவி பாரத்தின் இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - நடிகை விஜயசாந்தி
இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகளைச் சுருக்கமாக காணலாம்.
NEWS TODAY Important events to look for today இன்றைய செய்திகள் நிகழ்வுகளின் தொகுப்பு ETVBharatNewsToday கொடிநாள் சென்னை புறநகர் ரயில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு நடிகை விஜயசாந்தி விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு