இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 97 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (ஏப்ரல்.04) இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக ஒரு லட்சத்தை கரோனா பாதிப்பு தாண்டியது. எனவே, நிலைமையைக் கருத்தில் கொண்டு, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
’18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி’ - இந்திய மருத்துவ சங்கம் பரிந்துரை - இந்தியாவில் கரோனா பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் கரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளதால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடம், இந்திய மருத்துவ சங்கம் பரிந்துரைத்துள்ளது.
ஐ.எம்.ஏ
அதில், "தற்போது, 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி வருகிறோம். கரோனாவின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. யுத்தத்தில் உடனடியாக புதிய யுக்தியை செயல்படுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி கொடுக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க:மன்மோகன் சிங் வராததால் களையிழந்த விவிஐபி வாக்குச்சாவடி!