இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்துள்ளன. இருப்பினும், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்றின் தீவிரம் தொடர்ந்து காணப்படுகிறது.
தினசரி பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், ஈத் பண்டிகையை முன்னிட்டு கேரளா மாநிலத்தில் ஊரடங்ரு தளர்வுகளை முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கரோனாவால் திணறும் கேரளா
இதற்கு இந்திய மருத்துக் கூட்டமைப்பு(IMA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெருந்தொற்று காலத்தில் கேரள அரசு பொறுப்பற்ற முடிவை எடுத்துள்ளது எனவும்,கோவிட்-19 நெறிமுறைகளை அமல்படுத்தாவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் ஐ.எம்.ஏ(IMA) எச்சரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் 13 ஆயிரத்து 956 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. நாட்டிலேயே அதிகப்பட்சமாக கேரளாவில் மட்டும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 535 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
இதையும் படிங்க:இன்று மழைக்கால கூட்டத்தொடர்- 31 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்!