தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜார்கண்டில் சட்டவிரோதமாக கடத்தப்படும் விலை உயர்ந்த வைரங்கள்! - illegal diamond mining

ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல் கட்டுப்பாட்டுப் பகுதியில் சட்டவிரோதமாகத் தோண்டப்படும் வைர சுரங்கத்திலிருந்து மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களுக்கு வைரங்கள் கடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

diamond
diamond

By

Published : Dec 4, 2020, 7:10 AM IST

ஜாம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக வைரம், பன்னா சுரங்கங்கள் தடையின்றி தொடர்வதாகவும், இவை தெரிந்தாலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஜாம்ஷெட்பூரிலிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில், நக்சல் பாதிப்புக்குள்ளான டும்ரியா, குடபந்தா, முசபானி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வைரங்கள் கடத்தப்படுகின்றன.

இது குறித்து, ஏஐஎம்ஐஎம் மாநிலத் தலைவர் தரியாத் அஹ்மத் ஷெரீஃப் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "குடபந்தா, டும்ரியா மாவட்டங்களில் நீண்ட காலமாக வைரங்கள், பன்னா சுரங்கங்கள் நடந்துவருகின்றன. அப்போதைய மாநில அரசுகள் இதைக் கட்டுப்படுத்த முயற்சித்தன.

ஆனால் அவை இன்று பரந்துவிரிந்து காணப்படுகிறது. மத்திய அரசின் நடைமுறையால் மாநில அரசு பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது. தனியாருக்குத் தாரைவார்ப்பதைத் தடுத்து நிறுத்தி குத்தகை முறையிலான சுரங்கத்தை ஜார்கண்ட் மாநில அரசு நடத்த வேண்டும்.

4000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சிங்பூம் பகுதியில் உள்ள காட்டுக்குள் சுரங்க நடவடிக்கைத் திட்டத்திற்கு பல நிறுவனங்கள் முன்வந்த போதிலும், எந்த விளைவும் ஏற்படவில்லை என்று 2012 சுரங்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

காட்டுப்பகுதிக்குள் மறைந்திருக்கும் நக்சல் குழுக்கள் சட்டவிரோதமாக காவல் துறை, மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்புவைத்து, வைர சுரங்கத்தை மேற்கொண்டுவருகின்றனர். இதன்மூலம் மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு விலை உயர்ந்த வைரங்கள் கடத்தப்படுகின்றன" எனக் குற்றஞ்சாட்டினார்.

வைரங்கள் அப்பகுதியிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக ஒப்புக்கொண்ட முன்னாள் சிங்பும் எஸ்.பி. இது மிகுந்த கவலைக்குரிய விஷயம் என்றும், இதுதொடர்பாக காவல் துறை அலுவலர்கள், மாவட்ட நிர்வாகம், வனத் துறையினர் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ரஜினியின் முடிவை வரவேற்ற ஆந்திர முன்னாள் முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details