தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குழந்தை பிறந்த பின் முதல் முறையாக தன் துணைவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை இலியானா - நடிகை இலியானா

நடிகை இலியானா டி குரூஸ் அவர்களுக்கு குழந்தை பிறந்த பிறகு முதல் முறையாக தனது சமூக வலைதளத்தில் தனது துணையின் படத்தை வெளியிட்டார்.

குழந்தை பிறந்த பின் முதல் முறையாக தன் துணைவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை இலியானா
குழந்தை பிறந்த பின் முதல் முறையாக தன் துணைவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை இலியானா

By

Published : Aug 17, 2023, 4:55 PM IST

ஹைதராபாத்:தென்னிந்திய நடிகையான இலியானா தனக்கு குழந்தை பிறந்த பின் முதல் முறையாக தனது துணைவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடிகை லியானா டி குரூஸ் தமிழில் நடித்து வெளியான முதல் படம் கேடி.

பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் கேடி படத்திற்குப் பின்னர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்த படம் ‘நண்பன்’. இப்படம் அவருக்கு திரையுலகில் வெற்றிப்படமாக அமைந்தது. இவருக்குத் திருமணம் ஆகாமலிருந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட செய்தி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தார்.

இதையும் படிங்க: Jailer collection: 'விக்ரம்' மொத்த வசூலை 7 நாட்களில் முறியடித்த "ஜெயிலர்".. தலைவர் காட்டுல அடைமழை தான்!

தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எப்போதும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்துகொள்ளாத இவர் ஜூலை 17 தனது இஸ்டாகிராம் ஸ்டோரியில் 'டேட் நைட்' என்று குறிப்பிட்டு மூன்று புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பைப் பதிவிட்டுள்ளார். அதில், இலியானா நபர் ஒருவருடன் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் அந்த நபரின் பெயரை, அவர் குறித்த விபரங்களையோ இலியானா வெளியிடவில்லை.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் முறையாக தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகப் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது துணைவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது துணைவர் தனது செல்லப்பிரானியான பூனையை கட்டியணைத்தது போன்ற படத்தை பதிவிட்டுள்ளார்.

அவரது அடையாளங்களை வெளியிடாமல் புகைப்படங்களை மட்டும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் அபிஷேக் பச்சன் உடனான தி பிக் புல் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அவர் அடுத்ததாக ரன்தீப் ஹூடாவுடன் இணைந்து அன்ஃபெயர் அண்ட லவ்லி படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Jailer Kavala Song: உள்ளூர் நடிகர்கள் தொடங்கி உலக அளவில் வைப் ஏற்றும் ’காவாலா’ பாடல்!!

ABOUT THE AUTHOR

...view details