தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநிலங்களவையில் ஒலிக்கவுள்ள இளையராஜாவின் குரல்.. தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து! - Governor tamilisai soundararajan

மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் ஒலிக்கவுள்ள இளையராஜாவின் குரல்.. ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து!
மாநிலங்களவையில் ஒலிக்கவுள்ள இளையராஜாவின் குரல்.. ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து!

By

Published : Jul 6, 2022, 10:05 PM IST

இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை எம்.பி.யாக குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “கிராமிய இசையையும், ஆன்மிக இசையையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்று அடி அடியாக ரசிக்க வைத்த இசைஞானி இளையராஜா குரல், நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒலிப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழருக்கும் பெருமை. இசைஞானி இளையராஜா-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இசைஞானி இளையராஜா இணையற்ற இசைக்கு இசைந்து அங்கீகாரம் கொடுத்து தமிழ்நாட்டின் இசைக்குரலை நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒலிக்கச் செய்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:எம்.பி.யாக இளையராஜா நியமனம்: பாரதிராஜா வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details