தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெக்னிக்கல் கல்வியை ஆன்லைனில் கற்றுத் தரும் ஐஐடி - startup company

சென்னை: ஐஐடி மெட்ராஸ் உருவாக்கிய GUVI  என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனம் பிளேஸ்மென்ட் நோக்கிலான கோடிங் உருவாக்கும் முழு அளவிலான பாடங்களைக் கற்பிக்கும், தனது "ஜென் வகுப்புக்களை'' முழுக்க முழுக்க ஆன்லைனில் நடத்தத் தொடங்கியுள்ளது.

IIT Madras
IIT Madras

By

Published : Jan 6, 2021, 6:54 PM IST

இந்தப் பாடங்களில் வேலை வாய்ப்பைத் தேடுவோர் முழு அளவிலான கோடிங்கை உருவாக்கும் திறன்படைத்தவர்களாக ஆவதற்கு டெக்னாலஜிக்கல் பயிற்சி தரப்படுகிறது. இவ்வாறு பயிற்சி பெறுவோர், கோவிட்-19 வைரஸ் தொற்று காலகட்டத்தில் கம்பெனிகளின் புராஜெக்ட்டுகளை முடிப்பதற்கு மிகுந்த உதவியாக இருப்பார்கள் என்பதால் அவர்களுக்குத் தேவை அதிகரித்துள்ளது.

'முழு அளவில்' வலைதளத்தை உருவாக்குவோர் கிளையன்ட் மற்றும் செர்வர் மென்பொருளில் நன்கு பயிற்சி பெற்றவர்களாக ஆகின்றனர். மேலும், HTML மற்றும் CSS பிரிவுகளில் தேர்ச்சி பெறுவதோடு, ஜாவா ஸ்கிரிப்ட் மற்றும் தொடர்புடைய கருவிகளைப் பயன்படுத்தி புரோகிராமிங் ப்ரௌஸர்களையும், பைத்தான் மற்றும் தொடர்புடைய கருவிகளைப் பயன்படுத்தி செர்வர்களையும், SQL மற்றும் தொடர்புடைய கருவிகளைப் பயன்படுத்தி டேட்டா பேஸ்களையும் உருவாக்குவதில் தேர்ச்சி பெற்றவர்களாக ஆவார்கள்.

IIT Madras Incubated Startup GUVI

ஜென் வகுப்புக்களில் சேர விரும்பும் மற்றும் இப்போது சேர்ந்துள்ள முழு அளவிலான மென்பொருள் உருவாக்கும் மாணவர்களின் திறனைச் சரியான அளவில் வளர்ப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. அவர்களுக்கு அதிநவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பயிற்சி அளிக்கப்படுகிறது.

அவர்களின் வழக்கமான விஷயங்களுடன் கூடிய பயோ டேட்டாக்களில் திறன் அடிப்படையிலான அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் அவர்கள் உடனடியாக வேலையில் சேரும் தகுதி பெற்று தங்களது எதிர்காலத்திற்கு உத்தரவாதம் தேட முடிகிறது. இதன் மூலம், இந்திய மென்பொருள் துறையில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான திறன் படைத்தவர்களின் பற்றாக்குறை பிரச்சினை தீர்க்கப்படுகிறது. மென்பொருளின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை செயல்படுவது, சிஸ்டம் டிசைன், மற்றும் டேட்டா கட்டமைப்பு கணக்கீடுகள் போன்ற பிரச்சினைகளும் தீர்க்கப்படுகின்றன.

IIT Madras Incubated Startup GUVI

இதுதொடர்பாக GUVI நிறுவனத்தை இணைந்து உருவாக்கியவரும், சி இ ஓ-வுமான எஸ்,பி. பாலமுருகன், "கடினமான நேரங்களில் ஸ்மார்ட்டான திறன்களை வளர்க்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. எங்களிடம் கற்க வருவோர் வீட்டில் இருந்தபடியே கற்றுத் தேர்ந்து, வீட்டில் இருந்தபடியே வேலை தேடிக்கொள்ள நாங்கள் உதவுகிறோம்,'' என்று கூறினார்.

GUVI என்பது கல்வியும் தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்த ஒரு திட்டமாகும். இதில் வட்டார மொழிகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் பரவியுள்ள 1,000-க்கும் அதிகமான இஞ்சினியரிங் கல்லூரிகளில் இந்தப் பாட வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. ஏற்கனவே 4.7 லட்சம் இஞ்சினியர்கள் பைத்தான், ஜாவா மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களில் தங்களது திறன்களை வளர்த்துக் கொண்டுள்ளனர். இதனால் அவர்கள் ஐடி நிறுவனங்களில் வேலை பெற முடிந்திருக்கிறது.

ஐஐடி மெட்ராஸில் நேரடியாக நடத்தப்படும் 'ஜென் வகுப்புக்கள்' கடந்த பல மாதங்களாக வெற்றிகரமாகப் பயிற்சி அளித்து சுமார் 1000 மாணவர்களுக்கு 200-க்கும் அதிகமான பொருள் தயாரிப்புக் கம்பெனிகளிலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

IIT Madras Incubated Startup GUVI

இந்தப் பாடவகுப்பு பற்றி விவரித்த இணை நிறுவனரும், தலைமை டெக்னிக்கல் அதிகாரியுமான அருண் பிரகாஷ், ''தொழில்துறையின் தேவைகளைக் குறிப்பாக மையப்படுத்தி, GUVI நடத்தும் ஜென் வகுப்புக்களின் அடிப்படைப் பயிற்சியில் ஒருவர் தற்போது மிகவும் தேவையாக இருக்கக்கூடிய புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டு திறன்களை வளர்ப்பதற்கு உதவி செய்யப்படுகிறது.

இதனால், இந்தப் பாட வகுப்புக்கள் கற்போருக்கும், வேலை தரும் கம்பெனிகளின் நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய ஆதாயமாக அமைந்துள்ளது. இதில் சேர விரும்புவோருக்கு முன்கூட்டியே 'பூட்கேம்ப் அமர்வு' எனப்படும் தகுதிகாண் பரிசீலனை நடத்தப்பட்டு, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது மதிப்பிடப்படுகிறது.

இதனால் மாணவர்களுக்கு தங்களது தற்போதைய கற்கும் நிலை என்ன என்பதை அவர்களால் நன்கு மதிப்பிட முடிகிறது. இதை மேலும் ஓழுங்குபடுத்தும் வகையில், 1:1 சந்தேகம் போக்கும் அமர்வில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு விளக்கப்படுகின்றன. ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப தனித்தனி பயிற்சிகள் தரப்படுகின்றன.

இந்த வகுப்பில் கோடிங் பற்றிக் கற்க விரும்பும் மாணவர்களும், சர்வீஸ் அடிப்படையிலான கம்பெனிகளில் இருந்து புராடக்ட் கம்பெனிகளுக்கு அல்லது மேனுவல் டெஸ்டிங் அல்லது டெக்னிக்கல் சப்போர்ட் நிறுவனங்களுக்கு மாற விரும்பும் பணியாற்றும் புரொஃபஷனல்களும், கோடிங் பின்னணி அனுபவம் இல்லாதவர்களும் அல்லது தங்களது திறமைகளில் டேட்டா சயன்ஸை சேர்க்க விரும்புவோரும் சேரலாம் என்றார்.

GUVI ரெக்ரூட்மென்ட் டீம் மாணவர்களுக்கு அவர்களின் இலட்சியங்களுக்கு ஏற்ப, புராடக்ட் கம்பெனிகளில் நேர்காணல் வாய்ப்புக்களைப் பெற்றுத் தந்து, அவர்களை தயார்படுத்துகிறது. பிஸினஸ் (சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங்), கலைகள், ஆசிரியத் தொழில், ஆகியவற்றில் இருக்கும் அனுபவம் வாய்ந்த புரொஃபஷனல்களையும் இந்த டீம் ஈர்த்து, அவர்களை முழு அளவிலான கோடிங் உருவாக்குவோராக மாற்றுகிறது.

இஞ்சினியரிங் பட்டம் பெறாத மாணவர்கள் ஜென் வகுப்புக்களில் வழங்கப்படும் தனித்தனித் தேவைகளுக்கு ஏற்ப வழங்கப்படும் ஆலோசனைகள் மூலமாகவும், ஆன்லைன் வகுப்புக்களில் சான்றோர்களுடன் நடத்தப்படும் விவாதங்கள் மூலமாகவும் மற்றவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ளலாம். வார நாட்களில் மூன்று மாத காலத்திற்கும், வார இறுதி நாட்களில் 6 மாத காலத்திற்கும் ஜென் வகுப்புக்கள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன. இவற்றில் பேபால், கூகிள், ஸிமண்ட்டெக் , ஹனிவெல் போன்ற நிறுவனங்களில் இருந்து அழைக்கப்படும் தொழில்நுட்பப் பின்னணி உடைய தொழில்துறை நிபுணர்கள் மிகவும் திடகாத்திரமான தொழில்நுட்பத் திறன்களை வழங்குகின்றனர்.

இந்த வகுப்புக்கள் நல்ல இண்டர்நெட் இணைப்பு பெறும் வசதி உடையவர்களுக்கு மிகவும் சௌகரியமாக இருக்கும். மேலும், கற்பதில் மிகுந்த நாட்டம் கொண்டு, இடைவிடாமல் பிராக்டிஸ் செய்வதற்காக நேரம் ஒதுக்கக் கூடியவர்களுக்கு திறன்களைத் துரிதப்படுத்தி, அவர்கள் மென்பொருள் தொழில் நிறுவனங்களில் சேர்வதற்கு உதவியாகவும் இருக்கும்.

ஜென் வகுப்புக்களில் சேர்ந்து கற்போருக்கு தினமும் கோட்பாடு நோக்குடன் புராஜெக்ட்டுகள் பற்றித் தெரிந்து கொள்ள ஆன்லைனில் பூட் கேம்ப் ஸ்டைலில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்தப் பாடங்கள் வாரம் இருமுறை ஹேக்கத்தான்ஸ், டெக்னிக்கல் ஆலோசனை & அவ்வப்போது டெவலப்பர்களுடன் சந்திப்பு என்ற வகையில் நடத்தப்படுகின்றன.

இந்தச் சந்திப்புக்களில் கூகிள், லிங்க்டுஇன், மற்றும் ஃபேஸ்புக் போன்ற கம்பெனிகளில் இருந்து டெவலப்பர்கள் பங்கேற்கின்றனர். இது ஜென் வகுப்புக்களுக்கு ஒரு ஆதாயமாகும். ஒரு நிரலாக்க மொழியின் கோட்பாட்டை ஒரு கட்டமைக்கப்பட்ட முறையில் மறைப்பதில் ஒரு துவக்க முகாம் ஒரு சிறந்த அடித்தளத்தை அமைக்கிறது மற்றும் டெவலப்பர் துவக்க முகாமின் நடைமுறை அமர்வுகள் தினசரி திட்டங்களுடன் நிகழ்நேர திட்ட பயன்பாடுகளாக மாற்றப்படுகின்றன.

அதனுடன், ஒரு விரிவான குறியீட்டு நடைமுறை தளம் - 1000+ கேள்வி நூலகத்துடன் கூடிய கோடேகாடா, குறிப்பாக கற்றவர்களின் குறியீட்டு திறன்களை மேம்படுத்த அனைத்து முக்கிய நிரலாக்கக் கருத்துகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆர்வம் உள்ளவர்கள் இந்த முழு அளவிலான டெவலப்பர் வகுப்புக்களில் GUVI நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான https://www.guvi.in/zen மூலம் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். மேற்கொண்டு விவரங்களை அறிய எழுதுங்கள்fullstack@guvi.in

தங்களது தாய்மொழியில் கற்க விரும்பும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்களை வழங்கும் GUVI, மாணவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமலேயே திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், அவர்கள் வேலையில் சேர்ந்திட ஆயத்தமாகிடவும் உதவுகிறது. தகுதியுள்ள மாணவர்கள் அனைவருக்கும் தொழில்நுட்பத் திறன்களை வளர்ப்பதும், திறன்களை வளர்ப்பதற்கு மக்களின் நிலை ஒரு தடையாக இல்லாமல் பார்த்துக் கொள்வதும்தான் GUVI நிறுவனத்தின் லட்சியம்.

இதற்காக, தொழில்துறையில் தற்போது மிகவும் தேவையாக இருக்கிற தொழில்நுட்பத் திறன்களை மாணவர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி, வங்காளி போன்ற வட்டார மொழிகளிலும், ஆங்கிலத்திலும் GUVI கற்றுத் தருகிறது. இதன் மூலம் கல்வித்துறைக்கும், தொழில்துறைக்கும் இடையே இடைவெளியை இணைக்கும் பாலமாக இது திகழ்கிறது.

GUVI பற்றி:

ஐஐடி மெட்ராஸ் உருவாக்கிய GUVI, டெக்னிக்கல் கல்வியை ஆன்லைனில் கற்றுத் தரும் ஒரு கம்பெனியாகும். இதை பேபால் நிறுவனத்தில் முன்பு பணியாற்றியவர்கள் ஒரு யுடியூப் சேனலாகத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் தங்களது தொழில்நுட்பத் திறன்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். இஞ்சினியர்கள் கல்வி கற்கும் முறையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தி, அவர்களை நல்ல வேலைகளில் சேர்வதற்குத் தகுதி உடையவர்களாக ஆக்குகிறது. இது கற்பதற்கான ஒருங்கிணைந்த எடு-டெக் பிளாட்ஃபாரம் ஆகும். இங்கு டெக்னிக்கல் பைத்தான், மெஷின் லேர்னிங், மற்றும் ஜாவா போன்ற தொழில்நுட்பத் திறன்கள் தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி, வங்காளி போன்ற வட்டார மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வீடியோ பாடங்களாக நடத்தப்படுகின்றன. மேலும் பணியாற்றும் தொழில்முறை நிபுணர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் மூலமாக ஆண்ட்ராய்டு, ஜாவா, சி, சி++, மெஷின் லேர்னிங், Big Data , MongoDB ஆகிய பாடங்கள் நடத்தப்படுகின்றன.

GUVI வீடியோக்களை உலகெங்கும் ஒரு மில்லியன் மக்கள் கண்டுள்ளனர். இதனால் ஊக்கம் பெற்று இந்தக் கம்பெனி உருவாக்கப்பட்டுள்ளது, இப்போது, உலகில் கற்கும் முறையில் ஒரு மாற்றத்தை இது ஏற்படுத்தி, தொழில்துறைக்கும் கல்வித் துறைக்கும் இடையே இடைவெளியை நிரப்புகிறது, கேமிஃபிகேஷன் மெக்கானிக்ஸ் மற்றும் பைட் சைஸிலான வீடியோக்கள் மூலமாக கலந்துரையாடல் அனுபவங்களை வழங்கி, தனித்தனித் தேவைகளுக்கு ஏற்ற வகையில் கற்பிக்கப்படுகிறது.

கம்பெனிகள் தங்களது வாய்ப்புவளத் தேவைகளை நிறைவு செய்வதற்காக GUVI நிறுவனத்துடன் பார்ட்னராகியுள்ளன. கல்லூரிகளில் GUVI நிறுவனம் கொண்டுள்ள மிகவும் வலுவான நெட்வொர்க் இருப்பதால் இப்போது ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒரு கம்பெனி, கன்னியாகுமரியில் இருக்கும் ஒரு மாணவரின் புரொஃபலை பரிசீலிக்க முடியும். யூஸர் ஆக்டிவிட்டிகள் மற்றும் கலந்துரையாடல் திறன்களை ஆன்லைனில் கண்டறிந்து மாணவர்களின் கற்கும் திறன் புரொஃபைல் உருவாக்கப்படும்.

ABOUT THE AUTHOR

...view details