தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

214 மாணவர்களை தன்பாத் ஐ.ஐ.டி -ஐ.எஸ்.எம் நிர்வாகம் நீக்கியுள்ளதா ? - dhanbad iit and ism latest news

ராஞ்சி : 2020-2021 ஆம் கல்வியண்டுக்கான பதிவு மற்றும் செமஸ்டர் கட்டணத்தை செலுத்தாத 214 மாணவர்களை தன்பாத் இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் (ஐ.எஸ்.எம்) கல்வி நிறுவனம் நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

214 மாணவர்களுக்கு கலந்துகொள்ள  தன்பாத் ஐ.ஐ.டி -ஐ.எஸ்.எம் நிர்வாகம் தடை விதித்துள்ளதா?
214 மாணவர்களுக்கு கலந்துகொள்ள தன்பாத் ஐ.ஐ.டி -ஐ.எஸ்.எம் நிர்வாகம் தடை விதித்துள்ளதா?

By

Published : Dec 11, 2020, 6:51 PM IST

இது தொடர்பாக டுடோரியல் டீன் பேராசிரியர் சிரஞ்சீவ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) கல்வி நிறுவனத்தின் கீழ் இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் (ஐ.எஸ்.எம்) தன்பாத்தில் பயின்றுவரும்

பி.டெக்., எம். டெக்., ஜூனியர் அனாலிசிஸ் ஃபெலோ (ஜே.ஆர்.எஃப்.), பி.எச்.டி., டிப்ளோமா ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 214 மாணவர்கள், 2020-2021 ஆம் ஆண்டுக்கான பதிவு மற்றும் பருவத் தேர்வுக் கட்டணத்தை செலுத்தவில்லை. அதில், 129 மாணவர்கள் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் பருவத் தேர்வுக்கான கட்டணங்களைச் செலுத்தவில்லை. அதே போல, 85 மாணவர்கள் செமஸ்டர் கட்டணங்களுடன் கல்விக்கட்டணத்தை செலுத்தவில்லை.

ஊரடங்கு காரணமாக 4 முறை அவர்கள் அனைவருக்கும் மீள் நினைவூட்டப்பட்டு உள்ளது. இருப்பினும், இது தொடர்பாக அம்மாணவர்கள் எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை என்பதால் 214 மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள தன்பாத் இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் (ஐ.எஸ்.எம்) கல்வி நிறுவனம் நீக்கம்செய்ய முடிவெடுத்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

214 மாணவர்களை தன்பாத் ஐ.ஐ.டி -ஐ.எஸ்.எம் நிர்வாகம் நீக்கியுள்ளதா ?

இதனைத் தொடர்ந்த்து, ஐ.ஐ.டி-ஐ.எஸ்.எம் மாணவர்கள் இந்தாண்டுக் கல்விக் கட்டணங்களை ரத்து செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு ட்விட்டர் பரப்புரை வழியே கோரிக்கை விடுத்தனர்.

தன்பாத் இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் (ஐ.எஸ்.எம்) கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை

இதனிடையே, இந்தாண்டுக்கான கல்விக் கட்டணங்களை செலுத்த டிசம்பர் 16ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. 214 மாணவர்களின் எதிர்காலம் கருதி விரைவில், தன்பாத் ஐ.ஐ.டி-ஐ.எஸ்.எம் செனட் சபை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிய முடிகிறது.

இதையும் படிங்க :கேரள தேர்தல் பணியில் களமிறங்கிய ரோபோட்!

ABOUT THE AUTHOR

...view details