இந்தூர் (மத்திய பிரதேசம்): லுகேமியா என்பது ஒருவகை இரத்த புற்றுநோய் ஆகும். இது பொதுவாக எலும்பு மஜ்ஜையில் தொடங்கி அதிக எண்ணிக்கையிலான அசாதாரண இரத்த அணுக்களை உருவாக்குகிறது. இந்த இரத்த அணுக்கள் லுகேமியா செல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்தூரில் அமைந்துள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) குழுவினர் கடுமையான லிம்போபிளாஸ்டிக் லுகேமியா (ALL) சிகிச்சைக்கு புரத பொறியியல் அணுகுமுறையைப் பயன்படுத்தி புதிய செலவு குறைந்த மருந்து அஸ்பாரகினேஸை (MASPAR) உருவாக்கியுள்ளனர்.
குறைவான அல்லது குறைவான பக்க விளைவுகள் அற்ற இம்மருந்து 12 ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ளது. லுகேமியா ஒரு வகை இரத்த புற்றுநோயாகும். இந்த வகை நோயினால் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25,000 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதில் நான்கில் ஒரு பங்கு நோயாளிகளுக்கு மட்டுமே சரியான சிகிச்சை கிடைக்கிறது.
மேலும், தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் அஸ்பாரகினேஸின் மருந்துகள் தொடர்ச்சியான அளவுகள், கடுமையான ஒவ்வாமை எதிர்வினைகள், ஹைபர்சென்சிட்டிவிட்டி மற்றும் பல்வேறு உறுப்புகள் பாதிப்பு உள்பட கணையத்தில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துதல் என பல்வேறு பிரச்சினைகளை கொடுத்துவருகின்றன.