தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல்: சாதனை படைத்த இந்திய பல்கலைக்கழகங்கள்! - ஐஐடி பாம்பே

உலகளவில் உயர்க் கல்வி குறித்து ஆய்வு நடத்தி தரவரிசை பட்டியலில் வெளியிட்டு க்யூ.எஸ் உலக தரவரிசை பட்டியலில் மும்பை ஐஐடி 147வது இடத்தை பிடித்து புது மைல்கல் படைத்தது. அண்ணா பல்கலைக்கழகம் 427வது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் 526 வது இடத்தையும் அந்த தரவரிசை பட்டியலில் இடம் பிடித்தன.

IIT Bombay
IIT Bombay

By

Published : Jun 28, 2023, 6:35 PM IST

டெல்லி : குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் எனப்படும் க்யூ.எஸ் உலக பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலில் மும்பை ஐஐடி 150 இடங்களுக்குள் முன்னேறி புது மைல்கல் படைத்து உள்ளது.

உயர்க் கல்வி குறித்து உலகளவில், லண்டன் நாட்டைச் சேர்ந்த க்யூ.எஸ் (QS - குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்) என்ற அமைப்பு ஆய்வு செய்து ஆண்டுதோறும் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஆசியா, ஐரோப்பியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செயல்படும் உயர் கல்வி நிறுவனங்கள் இதில் இடம் பெற்று வருகின்றன.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான 2 ஆயிரத்து 900 உயர்க் கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து, க்யூ.எஸ் அமைப்பு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 45 பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்று உள்ளதாக க்யூ.எஸ் அமைப்பு தெரிவித்து உள்ளது.

அதிகபட்சமாக முதல் 150வது இடங்களுக்குள் மும்பை ஐஐடி நுழைந்து புது மைல்கல் படைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டுக்கான க்யூ.எஸ் அமைப்பின் தரவரிசை பட்டியலில் மும்பை ஐஐடி 149வது இடத்தை பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு 177வது இடத்தை மும்பை ஐஐடி பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. க்யூ.எஸ் அமைப்பின் மதிப்பெண் பட்டியலில் மும்பை ஐஐடி 100க்கு 51 புள்ளி 7 மதிப்பெண்கள் பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன் கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய அறிவியல் கழகம் பெங்களூரு 147வது இடத்தை பிடித்ததே இதுவரை இந்தியா பல்கலைக்கழகங்களின் உச்சபட்ச தரவரிசையாக உள்ளது. நடப்பாண்டுக்கான தரவரிசை பட்டியலில் அதிகபட்சமாக இந்தியாவைச் சேர்ந்த 45 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து பேசிய க்யூ.எஸ் அமைப்பின் தலைவர், இந்திய பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் சீரிய வகையில் இருப்பதாகவும், உலகம் முழுவதும் 2 ஆயிரத்து 900 பல்கலைக்கழகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதில் இந்தியாவைச் சேர்ந்த 45 பல்கலைக்கழகங்கள் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்து உள்ளதாக தெரிவித்தார்.

இதில், இந்தியாவைச் சேர்ந்த 41 உயர்க் கல்வி நிறுவனங்கள் க்யூ.எஸ். அமைபின் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்து இருந்த நிலையில் தற்போது கல்வி நிறுவனங்களின் எண்ணிககி அதிகரித்துள்ளன. மேலும் சண்டிகர் பல்கலைகக்கழகம் 780 வது இடத்தை பிடித்து உள்ளது. இந்திய அறிவியல் கழகம் பெங்களூரு 225வது இடத்தை பிடித்து உள்ளது.

தமிழக அளவில் அண்ணா பல்கலைக்கழகம் 427வது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் 526 வது இடத்தையும் பிடித்து உள்ளன. இதில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் சென்னை பல்கலைக்கழகம் 541-550 என்ற வரம்பிலும், அண்ணா பல்கலைக்கழகம் 551-560 என்ற வரம்பிலும் இடம் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :பொது சிவில் சட்டத்திற்கு ஆம் ஆத்மி ஆதரவு! ஒருமித்த கருத்தை உருவாக்க அறிவுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details