காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், லட்சத்தீவு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், "இந்தியக் கடற்பரப்பின் ஆபரணமாக லட்சத்தீவு திகழ்கிறது. அதை அறிவற்ற முட்டாள்கள் தங்கள் அதிகாரத்தால் அழித்து வருகின்றனர். இந்தச் சூழலில் லட்சத்தீவு மக்களின் பின் நான் துணை நிற்கிறேன்" என ராகுல் தெரிவித்துள்ளார்.
லட்சத்தீவு யூனியன் பிரதேச நிர்வாகி பிரபுல் படேல், அங்குள்ள மக்களின் கலாசார அடையாளத்தை அழித்து, அவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.