தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீங்கள் இந்து என்றால் இந்துத்துவம் எதற்கு? ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு எதிராக சாட்டை சுழற்றும் ராகுல் காந்தி! - இந்து மதம் குறித்து ராகுல் காந்தி

நான் உபநிடதங்கள் படித்துள்ளேன், நீங்கள் இந்து என்றால் இந்துத்துவம் எதற்கு என்று ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவிற்கு எதிராக ராகுல் காந்தி சாட்டை சுழற்றியுள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Nov 12, 2021, 7:08 PM IST

வார்தா (மகாராஷ்டிரா) : “காங்கிரஸ் சித்தாந்தம் ஒரு ஒளிவீசும் "அழகான நகை" போன்றது, அதற்குள் முடிவில்லாத சக்தி உள்ளது, ஆனால் பாஜகவால் அது மறைக்கப்பட்டுள்ளது. இந்து மதமும், இந்துத்துவமும் வெவ்வேறு கருத்துக்கள்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி உரையாற்றுகையில், “நாட்டில் காங்கிரஸ் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான இரண்டு சித்தாந்தங்கள் உள்ளன.

பாஜக ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்

இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸின் சித்தாந்தங்கள் வெறுப்புணர்வை கொண்டவை.

பாஜக

இந்தக் காவிக் குழுக்களால் ஊடகங்கள் முழுவதுமாக கைப்பற்றப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் அன்பான, பாசமுள்ள மற்றும் தேசியவாத சித்தாந்தத்தை பாஜக மறைத்து விட்டது. எனினும், எங்கள் சித்தாந்தம் உயிர்ப்புடன் உள்ளது. மேலும் இது துடிப்பானது, ஆனால் அது பாஜகவால் மறைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சித்தாந்தம்

காங்கிரஸின் சித்தாந்தத்தை நமது மக்களிடையே தீவிரமான பரப்புரை மூலம் கொண்டு செல்ல வேண்டும், நாம் இவ்வாறு செய்யாததால் அது மறைக்கப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து இந்து மதம் மற்றும் இந்துத்துவம் குறித்தும் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நான் உபநிடதங்களை படித்துள்ளேன். இந்து மதத்திற்கும், இந்துத்துவத்திற்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

இந்து மதம்- இந்துத்துவம்

இந்து மதம் சீக்கியரையோ அல்லது இஸ்லாமியரையோ அடிக்காது, ஆனால் இந்துத்துவம் சித்தாந்தம் அப்படியல்ல. இந்துத்துவாவிற்கும் இந்து மதத்திற்கும் வித்தியாசம் இருப்பதை நான் கூறுகிறேன்.

ஆர்எஸ்எஸ்

இது ஒரு எளிய தர்க்கம். நீங்கள் ஒரு இந்து என்றால் இந்துத்துவத்திற்கு என்ன தேவை?

கருத்தியல் சண்டை

இன்றைய இந்தியாவில், கருத்தியல் சண்டை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. காங்கிரஸ் சித்தாந்தம். அது பின்பற்றும் சித்தாந்தம் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவருகிறது.

ஆனால் ஆர்எஸ்எஸ் அப்படியல்ல. கடந்த காலத்தில் காங்கிரஸ் தனது கருத்துக்களை சரியாக பரப்புரை செய்யவில்லை. காங்கிரஸின் சித்தாந்தத்தை அதன் சொந்த அமைப்பில் வலுப்படுத்தி, கட்சித் தொண்டர்கள் மூலம் இந்தியா முழுவதும் பரப்புவதற்கான நேரமிது.

பயிற்சி

இந்து மதம், இந்துத்துவம் குறித்து அனைத்துக் கட்சித் தொண்டர்களுக்கும் கருத்தியல் பயிற்சி அளிக்க வேண்டும். காங்கிரஸ், ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள் வேறுபட்டவை. வருங்காலங்களில் காங்கிரஸின் சித்தாந்தத்தை எடுத்துரைக்க வேண்டும்.

காங்கிரஸ்

நாம் நமது சித்தாந்தத்தை பொதுமக்களிடத்தில் ஆழமாக பரப்புரை செய்தால், சட்டப்பிரிவு 370 நீக்கம், பயங்கரவாதம் முதல் தேசியவாதம் வரை எனப் பல்வேறு கேள்விகளுக்கும் பதில்கள் கிடைக்கும்.

சாத்தியமாகும்

ஆனால் நாம் அவற்றை செய்யவில்லை. காங்கிரஸின் சித்தாந்தம் ஒரு "அழகான ஒளிவீசும் நகை" போன்றது, அதற்குள் முடிவில்லாத சக்தி உள்ளது. நமது பலம் மற்றும் இருப்பிடத்தை கண்டறிவது அவசியம்.

அவர்கள் தங்களின் சித்தாந்தத்தை படிகமாக்கியுள்ளனர். நாமும் நமது சித்தாந்தத்தை படிகமாக்க வேண்டும். அதைச் செய்யும் தருணத்தில் அவர்களின் சித்தாந்தம் உடையும், இன்று பரப்பப்படும் வெறுப்பு மறைந்து, எதிர்காலம் உறுதியாகிவிடும்” என்றார்.

இதையும் படிங்க : இந்து மதமும், இந்துத்துவமும் ஒன்றல்ல- ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details