ஹைதராபாத்: நாம் எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலில் கூகுள் செய்வது வழக்கமாகிவிட்டது. நாம் எதை வேண்டுமானாலும் கூகுள் செய்யலாம்தானே? ஆம். ஆனால், சிலவற்றை நீங்கள் தொடர்ச்சியாக கூகுளில் தேடினால் அது உங்களுக்கு பிரச்சினையாக மாறும். அவற்றைப் பார்க்கலாம்...
- வெடிகுண்டு தயாரிப்பது எப்படி?, பிரஷர் குக்கர் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? இதுபோன்றவற்றை கூகுளில் தேடாதீர்கள்.
- குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் சிறுவர் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வீடியோக்களை தேடுவது, பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது குற்றம்.
- ஆள் கடத்தல், போதைப்பொருள் போன்ற குற்றங்கள் தொடர்பாக தேடாதீர்கள்.
- கருக்கலைப்புக்கு நம் நாட்டில் கடுமையான விதிமுறைகள் உள்ளன. அதனால், கருக்கலைப்பு தொடர்பாக அடிக்கடி தேடுவதும் பிரச்சனை.