இந்தியாவின் முன்னணி பெருந்தொற்று வல்லுநரும் பேராசிரியருமான ககன்தீப் கங்க் கருத்தரங்கு ஒன்றில் காணொலி வாயிலாகப் பங்கேற்றார். இந்தக் கருத்தரங்கில் இந்தியாவில் நிலவும் கோவிட்-19 தொற்று பாதிப்பு, தடுப்பூசித் திட்டம், சுகாதாரக் கட்டமைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
அவர் பேசியதாவது, "இந்தியாவில் கோவிட்-19 தொற்று முழுமையாக ஓய்ந்துவிட்டதா எனக் கேட்டால் அதன் பதில் இல்லை என்றே கூற வேண்டும். எனவே, அடுத்த சில காலத்திற்கு தொற்றை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
அதேவேளை, இன்றைய சூழலில் மூன்றாம் அலை பாதிப்பு பெரிய அளவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. தடுப்பூசித் திட்டத்தையும் தாண்டி புதிய வகை தொற்று உருவெடுத்தாலே ஒழிய மூன்றாம் அலையின் தீவிர பாதிப்பு ஏற்படுத்தாது.