மேற்குவங்கம்:மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசைக்கண்டித்து, கொல்கத்தாவில் நேற்று(செப்.13) பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
இந்த நிலையில், சிதல்குச்சியில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கூட்டத்தில் கலந்து கொண்ட, அமைச்சர் உதயன் குஹா, பாஜகவினருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது, "எங்களது தொண்டர்கள், நிர்வாகிகள் தாக்கப்பட்டால், நாங்கள் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கமாட்டோம். நீங்கள் ஒருவரைத் தாக்கினால், அதற்குப் பதிலாக நாங்கள் இருவரைத் தாக்குவோம்" என்று உதயன் குஹா கூறினார்.