தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பிரதமர் மோடி சொன்னால் புதின் கேட்கக்கூடும் - இந்தியாவிடம் கெஞ்சிய உக்ரைன் தூதர் - உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்

'உலக அளவில் மதிப்புமிக்க தலைவர் மோடி; ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு நல்ல உறவு உள்ளது. உக்ரைன் மீதான தாக்குதல் குறித்து பிரதமர் மோடி வலுவான கருத்துகளைத் தெரிவித்தால் ரஷ்ய அதிபர் புதின் அவரது பேச்சைக் கேட்கக்கூடும். குறைந்தபட்சம் அதுபற்றி சிந்திப்பார்' என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் டாக்டர் பொலிகா தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தூதர்
உக்ரைன் தூதர்

By

Published : Feb 24, 2022, 7:24 PM IST

Updated : Feb 24, 2022, 7:56 PM IST

டெல்லி:உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் அங்கு போர் மூண்டுள்ளது. உக்ரைனில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர். இருநாட்டு ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரைனில் தாக்குதலைத் தொடங்கியுள்ள ரஷ்யா, உக்ரைன் விமானப்படை தளங்களை அழித்துவிட்டதாகக் கூறுகிறது.

உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும் என்று கூறியுள்ளது. அமைதியான வழியில் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.

இந்தநிலையில், இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் டாக்டர் பொலிகா செய்தியாளர்களிடம் கூறுகையில்,"உலகில் சக்திவாய்ந்த மற்றும் மதிப்புமிக்க தலைவர் பிரதமர் மோடி. உக்ரைனுக்கு இந்தியா ஆதரவு தந்து உதவ வேண்டும்.

ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு நல்ல உறவு உள்ளது. மற்ற தலைவர்கள் கூறுவதை புதின் கேட்பாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், மோடி சொன்னால் புதின் கேட்கக்கூடும். குறைந்தபட்சம் அதுபற்றி சிந்திப்பார். பிரதமர் மோடி புதினைத் தொடர்பு கொண்டு பேச வேண்டும்.

உக்ரைன் தூதர் பேட்டி

இந்தியாவிடம் இருந்து உக்ரைன் மிகவும் சாதகமான அணுகுமுறையை எதிர்பார்க்கிறது. உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் ஐந்து விமானங்கள், இரண்டு ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. ராணுவ கட்டமைப்புகளை மட்டுமே தாக்குவதாக ரஷ்யா கூறுகிறது. ஆனால், நாங்கள் உயிர்ச்சேதத்தை சந்தித்துள்ளோம். ரஷ்யா எல்லை தாண்டி உள் நுழைய முயல்கிறது" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் முன்னதாக உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து புதின் கூறியிருப்பதாவது, ' உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் தலையிட நினைக்கும் பிறநாட்டினருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். யாராவது தலையிட்டால், சரித்திரத்தில் நீங்கள் எப்போதும் சந்திக்காத விளைவுகளை சந்திப்பீர்கள்’ எனத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஷ்யா-உக்ரைன் போர்: ஒரே நாளில் ரூ.1,240 உயர்ந்த தங்கம் விலை

Last Updated : Feb 24, 2022, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details