தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தடுப்பூசி தொடர்பாக சந்தேகமிருந்தால் 104 எண்ணில் அழையுங்கள்- கிரண்பேடி

தடுப்பூசி தொடர்பாக ஏதேனும் சந்தேகமிருந்தால் 104 எண்ணில் அழையுங்கள் எனப் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

If in doubt about the vaccine call 104  vaccine  call 104  Kiran Bedi  புதுச்சேரி  கிரண்பேடி  புதுச்சேரி மாநிலச் செய்திகள்  கிரண்பேடி செய்திகள்  கரோனா
If in doubt about the vaccine call 104 vaccine call 104 Kiran Bedi புதுச்சேரி கிரண்பேடி புதுச்சேரி மாநிலச் செய்திகள் கிரண்பேடி செய்திகள் கரோனா

By

Published : Jan 17, 2021, 5:35 AM IST

புதுச்சேரி: கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்த புதுச்சேரி ராஜிவ் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு ஆளுநர் கிரண்பேடி நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருடன் சந்தித்து பேசினார். மேலும் தடுப்பு மருந்து குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து இன்று ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவல் மக்களின் ஒத்துழைப்பால் தடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தொடர்ந்து தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கிறார்கள் என நான் நம்புகிறேன். தகுந்த இடைவெளி கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கான கரோனா தடுப்பூசி அனுப்பியுள்ளது.
முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் அந்தத் தடுப்பூசி இன்று போடப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக காவல்துறை, உள்ளாட்சி துறை பணியாளர்களுக்கு போடப்படுகிறது. மூன்றாம் கட்டமாக பொது மக்களுக்கு போடப்படுகிறது. இதுதொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 104 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தடுப்பு மருந்து கிடைக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

ABOUT THE AUTHOR

...view details