தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா பயமாக இருந்தால், பாகிஸ்தான் செல்லுங்கள்- பிரதமருக்கு காங்கிரஸ் அறிவுரை!

பிரதமரின் பஞ்சாப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த ஜார்க்கண்ட் மூத்த தலைவரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான இர்பான் அன்சாரி, "இந்தியா பாதுகாப்பற்ற உணர்வை கொடுத்தால் பாகிஸ்தான் செல்லலாம்" என்றார்.

Irfan Ansari
Irfan Ansari

By

Published : Jan 6, 2022, 5:38 PM IST

Updated : Jan 6, 2022, 8:10 PM IST

டெல்லி : ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் மூத்தத் தலைவரும், எம்எல்ஏவுமான இர்பான் அன்சாரி, “ பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியாவில் இருக்க பயமாக இருக்கிறதென்றால், பாகிஸ்தான் செல்லலாம்” என்று வியாழக்கிழமை (ஜன.7) கூறினார்.

ஜார்க்கண்ட் எம்எல்ஏ இர்பான் அன்சாரி ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “இந்தியாவில் இருக்க பிரதமர் நரேந்திர மோடி பயந்தால், பாகிஸ்தான் செல்லட்டும். அவர் அங்கு பாதுகாப்பாக இருக்கக்கூடும். நான் வேண்டுமானால் அவர் பாகிஸ்தான் செல்ல டிக்கெட் எடுத்துக்கொடுக்கிறேன். இதே சலுகையை அத்துனை பாஜகவினருக்கும் நான் அளிக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து அவர், “மேற்கு வங்க தேர்தலின் போது, மேற்கு வங்க மக்களை பாஜகவினர் அவமதித்தனர். தற்போது எங்கள் பஞ்சாப் சகோதரர்களும் அவர் அதையை செய்கிறார்” என்றார்.

இந்தியா பயமாக இருந்தால், பாகிஸ்தான் செல்லுங்கள்- பிரதமருக்கு காங்கிரஸ் அறிவுரை!

பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் தென்பட்டதால் அவர் பாதியிலேயே டெல்லி திரும்பினார்.

மேலும் அங்குள்ள சாலை மார்க்கமான மேம்பாலம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி 15-20 நிமிடங்கள் வரை காத்திருந்தார். இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம், பஞ்சாப் அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை (ஜன.7) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க :பஞ்சாப் பாதுகாப்பு குறைபாடு; குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

Last Updated : Jan 6, 2022, 8:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details