மும்பை:ஐக்கிய ஜனதா தளம் குறைவான தொகுதிகளை பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் பதவி கிடைத்தால், சிவசேனாவுக்கு நன்றி கூறுங்கள் என நிதிஷ் குமாருக்கு சிவசேனா வாழ்த்து தெரிவித்துள்ளது.
இது பற்றி சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், “ஐக்கிய ஜனதா தளம் குறைந்த தொகுதிகளை பெற்ற போதிலும், அந்தக் கட்சியை சேர்ந்த நிதிஷ் குமாரை முதலமைச்சராக்க பாஜக சம்மதித்தால், அதற்காக அவர் சிவசேனாவுக்கு நன்றி கூற வேண்டும்” எனக் கூறினார்.
இதற்கிடையில், சிவசேனா பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டு, எதிர் கருத்தியல் கொண்ட காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்தது குறித்து பேசுகையில், “என்ன நடக்க வேண்டும் என்பதை எங்களது கூட்டாளிக்கு சிவசேனா காட்டியது” என்றார்.
மேலும் நிதிஷ் குமார் விவகாரம் குறித்து கூறுகையில், “பாஜக, ஜேடியூ தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதாக தொலைக்காட்சிகளில் பார்க்கிறேன். ஆகவே நிதிஷ் குமார் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்காக அவர் சிவசேனாவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்” என்றார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா, பாஜகவுடன் இணைந்தது சந்தித்தது. இந்தத் தேர்தலில் 56 இடங்களை பெற்ற சிவசேனாவை முதலமைச்சராக 105 இடங்களை பெற்ற பாஜக தவிர்த்துவிட்டது.
இதனால் அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், முதலமைச்சர் பதவி கிடைத்தால் நன்றி கூறுங்கள் என நிதிஷ் குமாருக்கு சிவசேனா வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அரசியல் களத்தில் நிதிஷுக்கு ஓய்வுகொடுக்க மக்கள் முடிவெடுத்துவிட்டனர் - சஞ்சய் ரவுத்