தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமித்ஷா மகனுக்கு இருக்கும் உரிமை கங்குலிக்கு இல்லையா? - மம்தா கேட்கும் கேள்வி - அமித் ஷா மகன் ஜெய் ஷா

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி 2வது முறையாக தேர்வாகாமல் தடுக்கப்பட்டுள்ளததாகவும், இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அமித் ஷாவின் மகன் தொடரலாம் என்றால், சவுரவ் ஏன் தொடரக்கூடாது?: பிசிசிஐக்கு மம்தா பானர்ஜி கேள்வி
அமித் ஷாவின் மகன் தொடரலாம் என்றால், சவுரவ் ஏன் தொடரக்கூடாது?: பிசிசிஐக்கு மம்தா பானர்ஜி கேள்வி

By

Published : Oct 17, 2022, 6:26 PM IST

கொல்கத்தா:பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சவுரவ் கங்குலி நீக்கப்பட்டது குறித்து பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ” ஐசிசி தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலியை பரிந்துரைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்த அவர், அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராக நீடிப்பது குறித்து கேள்வி” எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "கங்குலி 'வங்காளத்தின் பெருமை'. பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி 2வது முறையாக பதவி பறிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது தவறு என்ன? அமித் ஷாவின் மகன் குழுவில் இருக்க முடியும் என்றால், சவுரவ் ஏன் இருக்க முடியாது.

நான் யாரையும் விமர்சிக்கவில்லை, சௌரவ் கங்குலி மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் திறமையான நிர்வாகியாக தன்னை நிரூபித்துள்ளார். பிசிசிஐயில் இருந்து அவர் நீக்கப்பட்டதற்கு, அவரை ஐசிசியில் நியமனம் செய்வது மட்டுமே அவருக்கு தரப்படும் இழப்பீடு ஆகும்" என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”ஐசிசி தலைவர் தேர்தலில் போட்டியிட சவுரவ் கங்குலி அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவேன்" என்றார்.

இதையும் படிங்க:சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கு - ஆர்பிஐ, சிபிஐக்கு நோட்டீஸ்!

ABOUT THE AUTHOR

...view details