டெல்லி: சர்வதேச விளையாட்டிப் போட்டிகளில், பதக்கங்களை வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்க்கக் கூடிய முக்கியமான விளையாட்டுகளில் ஒன்றாக திகழ்கிறது மல்யுத்தம். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக, பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி வகித்து வருகிறார்.
இவர், பாரதிய ஜனதா கட்சி எம்.பியும் ஆவார். இவரும், சில பயிற்சியாளர்களும் சேர்ந்து கொண்டு மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக முன்வைக்கப்பட்டுள்ள புகார் தான், தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாது, ஊடகங்களிலும் விவாதப் பொருளாக மாறி உள்ளது.
பாதிக்கப்பட்ட தங்களுக்கு நீதி வேண்டும் என்றும், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறை அனுமதி மறுத்து அவர்களை குண்டுகட்டாக தூக்கிச்செல்லப்பட்டனர். இதனிடையே, மல்யுத்த வீரர்கள் மீதான தாக்குதல், வழக்குப்பதிவு உள்ளிட்டவற்றிற்கு, உலக மல்யுத்த கூட்டமைப்பு உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: Rahul Gandhi: "பிரதமர் மோடி கடவுளுக்கே வகுப்பு எடுப்பார்" - அமெரிக்காவில் ராகுல் காந்தி விமர்சனம்!
போலீசார் தங்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாகவும், ஆனால் பாலியல் தொந்தரவு கொடுத்தவர் பொதுக் கூட்டங்களில் எங்களை தாக்கி பேசுகிறார். அவர் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்து, மல்யுத்த வீராங்கனைகள் தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கையில் வீச முடிவெடுத்து, நேற்று ( மே 30) அங்கு திரண்ட நிலையில், விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயத், இந்த விவகாரத்தில் தலையிட்டார். இந்த விவகாரத்தில், இன்னும் 5 நாட்களில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்த நிலையில், அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இதனிடையே, டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறியதாவது, "எனக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கூட, நான் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துக் கொள்வேன். என்மீது குற்றச்சாட்டு சுமத்தி உள்ள உங்களைப் பார்த்து ஒன்று கேட்கிறேன். உங்களிடம், ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும். நீதிமன்றம் வழங்கும் எந்த தண்டனையையும் ஏற்க நான் தயாராக இருப்பதாக, அவர் குறிப்பிட்டு உள்ளார்.
பிரிஜ் பூஷன் சரண் சிங் விவகாரத்தில், 5 நாட்களில் தீர்வு எட்டப்படும் என்று மல்யுத்த வீராங்கனைகள் எதிர்பார்த்து இருந்த நிலையிம், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின், இந்த பேச்சு, இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பு மிக்கதாக மாற்றி உள்ளது.
இதையும் படிங்க: டோக்கியோ - சென்னை விமான சேவையை மீண்டும் தொடங்குக: மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்