காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பசல்போரா பகுதியில் மேம்படுத்தப்பட்ட ஐஇடி குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நடத்திய இந்த வெடிகுண்டு தாக்குதலில், நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் ஏற்படவில்லை.
காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வாகனம் அருகே ஐஇடி குண்டுவெடிப்பு! - Kashmir's Anantnag district
காஷ்மீர்: அனந்த்நாக் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வாகனம் அருகே மேம்படுத்தப்பட்ட ஐஇடி குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது
காஷ்மீர்
கிடைத்த தகவலின்படி, சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனத்தைக் குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், பொதுமக்களின் வாகனங்களும் சேதமடைந்துள்ளன. குண்டு வெடிப்புக்குப் பின்னர், அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:'81 போகோ ஹரம் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை' - நைஜீரியா ராணுவம் தகவல்!