கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிலேகல்லியில், ஃபிரஷ் ஷாட் (Fresh Shot) என்ற நிறுவனம் இட்லி தயாரிக்கும் தானியங்கி எந்திரத்தை (Idly ATM) அறிமுகப்படுத்தி உள்ளது. ஹீராமத் மற்றும் சுரேஷ் சந்திரஷேகரன் ஆகியோர் கண்டுபிடித்த இந்த எந்திரத்திற்கு ‘இட்லி போட்’ (Idly Boat) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த எந்திரம் மூலம் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் ரூ.25 முதல் ரூ.30 வரை செலுத்தி 2 இட்லிகளை பெற்றுக் கொள்ளலாம்.
இதில் ஃபோடி இட்லி, பெரி பெரி இட்லி, இத்தாலியன் ஆயுர்வேத இட்லி, தானிய இட்லி மற்றும் சாக்லேட் இட்லி ஆகியவை கிடைக்கும். இவ்வாறு தயார் செய்யப்படும் இட்லிகள், 55 வினாடிகளுக்குள் தயாராகி வாடிக்கையாளர்களின் கைகளில் ருசி பார்க்க வந்தடையும். மேலும் தோசை மற்றும் பானிபூரி ஆகியவற்றை தானியங்கி முறையில் வழங்குவதற்கான ஆயத்த பணிகளை ஃபிரஷ் ஷாட் நிறுவனம் செய்து வருகிறது.