டெல்லி: இந்திய பள்ளிகள் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ) இன்று (சனிக்கிழமை) 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான முடிவுகளை அறிவிக்கும் என்று வாரிய செயலாளர் ஜெர்ரி அராத்தூன் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று மாலை 3 மணியளவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இந்தாண்டிற்கான ஐசிஎஸ்இ ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 99.98 ஆகவும், ஐஎஸ்சி தேர்ச்சி விகிதம் 99.76% ஆகவும் பதிவாகியுள்ளது.