இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இந்தியாவில் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கியத் தகவலைத் தெரிவித்தார்.
அதில், தற்போதைய சூழலில் இந்தியாவில் தொடக்கப் பள்ளிகளைத் திறக்கலாம் எனவும், மாவட்ட நிர்வாகம் இதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வுசெய்து அதன் பின்னர் அதற்கான ஆயத்தங்களைச் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், உயர்நிலைப் பள்ளிகளைத் திறப்பதற்கு முன்னால், தொடக்கப்பள்ளிகளைத் திறக்க வேண்டும் எனக் கூறிய அவர், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள், பேருந்து ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதா என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும் எனக் கூறினார்.
பெரியவர்களைவிட குழந்தைகள் இந்தத் தொற்றை எளிதில் கையாள முடியும் எனக் கூறிய அவர், 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு அரிதாகவே பாதிப்பு ஏற்படும் என்றார்.
இதையும் படிங்க:கர்நாடகா காங்கிரசுக்கு ராகுல் அறிவுரை