டெல்லி:கரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு இளைஞர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக ஒரு கருத்து கூறப்பட்டது. இந்த நிலையில் குஜராத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவின் போது கர்பா நடனமாடிய 10 இளைஞர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, கரோனா தடுப்பூசிக்கும், இளைஞர்களின் மாரடைப்புக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று பேசப்பட்டது.
இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இது குறித்து ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் முடிவில், கோவிட் 19 தடுப்பூசி இந்திய இளைஞர்களிடம் இறப்பு அபாயத்தை குறைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியதாவது, இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2023 18 முதல் 45 வயதுடையவர்களிடம் நடத்திய ஆய்வில், கோவிட் 19 தடுப்பூசியின் மூலம் இறப்பு ஏற்படும் அபாயம் குறைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.