தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வீட்டிலேயே கரோனா பரிசோதனை: இரண்டு கருவிகளுக்கு அனுமதி! - பான் பயோ

வீட்டில் இருந்தே கரோனா தொற்றைக் கண்டறியும் இரண்டு சுயப்பரிசோதனைக் கருவிகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா சுய பரிசோதனைக் கருவி
கொரோனா சுய பரிசோதனைக் கருவி

By

Published : Jun 4, 2021, 10:54 PM IST

டெல்லி: இரண்டு கரோனா சுய பரிசோதனைக் கருவிகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்துள்ளது.

மை லேப் டிஸ்கவரி சொலியூஷன்ஸ் நிறுவனத்தின் 'கோவிஷெல்ஃப்' , அபோட் நிறுவனத்தின் 'பான் பயோ' ஆகிய இரண்டு சுயப் பரிசோதனை கருவிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இந்தக் கருவிகளுக்கு அனுமதி அளித்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், "வீட்டில் இருந்து சுயபரிசோதனை மேற்கொள்பவர்கள், அந்தந்த நிறுவனங்கள் கொடுத்திருக்கும் கட்டுபாடுகளையும், வழிமுறைகளையும் கட்டாயம் பின்பற்றவேண்டும்.

மேலும், பயன்படுத்திய கருவிகளை அப்புறப்படுத்த நிறுவனங்கள் கூறியிருக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கரோனா தொற்றின் அறிகுறிகள் உள்ளவர், தொற்று பாதித்தவருடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் மட்டுமே இந்தப் பரிசோதனையை வீட்டிலிருந்து மேற்கொள்ளவேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details