தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுதந்திர தினத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி - பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை! - 75வது சுதந்திர தினம்

சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த டெல்லி காவல்துறைக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

IB
IB

By

Published : Aug 4, 2022, 1:43 PM IST

டெல்லி:நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தினத்தன்று டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அதனால் அனைத்து மாநில காவல்துறைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக டெல்லி மாநில காவல்துறை உஷார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதய்பூர், அமராவதி படுகொலை மற்றும் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை குறித்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ள உளவுத்துறை, பயங்கவாதக் குழுக்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்கவும், ரோஹிங்கியா மற்றும் ஆப்கானிஸ்தானியர்க் வசிக்கும் இடங்களை தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நேஷனல் ஹெரால்டு: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details