தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரான்ஸிலிருந்து மேலும் மூன்று ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை! - ரஃபேல் விமானம்

பிரான்ஸ் நாட்டிலிருந்து மேலும் மூன்று ரஃபேல் விமானங்கள் நவம்பர் 4ஆம் தேதி இந்தியா வரவிருக்கின்றன.

New Rafale Jets
பிரான்ஸிலிருந்து மேலும் மூன்று ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை

By

Published : Nov 2, 2020, 10:29 PM IST

டெல்லி: இந்திய விமானப்படை பிரான்ஸிலிருந்து மேலும் மூன்று ரஃபேல் விமானங்களை பெறவிருக்கிறது. பிரானஸ் நாட்டிலுள்ள இஸ்திரேஸ் என்ற இடத்திலிருந்து கிளம்பும் இந்த மூன்று விமானங்களும் எங்கும் நிற்காமல் எட்டுமணி நேரத்தில் இந்தியாவிலுள்ள ஜாம் நகருக்கு நவம்பர் 4ஆம் தேதி வந்துசேரும்.

நடுவானில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பவும், பாதுகாப்புக்காகவும் பிரான்ஸ் விமானப்படை விமானங்கள் அணிவகுத்து வரும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே பிரான்ஸிடமிருந்து ஐந்து ரஃபேல் விமானங்களை இந்தியா பெற்றுள்ளது.

இந்தியா அரசு பிரானஸ் நாட்டு நிறுவனத்துடன் 35 ரஃபேல் விமானங்களை 59ஆயிரம் கோடி ரூபாயில் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

முன்னதாக ஐந்து ரஃபேல் விமானங்களை இந்திய பெற்றபோது, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஃபேல் ஒப்பந்தம் இந்திய விமானப்படையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரஃபேல், இந்தியப் போர் விமானங்களைப் பற்றிய சுருக்கம்

ABOUT THE AUTHOR

...view details