மகாராஷ்டிரா:இந்திய விமானப் படை மற்றும் பிரான்ஸ் கப்பல் படை விமானங்கள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் கப்பல் படைப் பிரிவின் சார்லஸ் டி கோல் குழுவுடன், இந்திய விமானப் படை வீரர்கள் வான் பயிற்சியில் ஈடுபட்டனர். வான் பயிற்சியில் இந்திய விமானப் படையின் Su-30MKI, AWACS & IL-78 எரிபொருள் நிரப்பு டேங்கர் ஆகிய விமானங்கள் போர் பயிற்சியில் கலந்து கொண்டதாக இந்திய விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா - பிரான்ஸ் ராணுவம் கூட்டு போர் பயிற்சி
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே இந்தியா, பிரான்ஸ் ராணுவ விமானங்கள் கூட்டு போர் பயிர்சியில் ஈடுபட்டதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.
அதேபோல் பிரான்ஸ் கடற்படையைச் சேர்ந்த ரபெல்-M மற்றும் E2C Hawkeye வகை போர் விமானங்கள் வான் பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லை ஊடுவருல் தடுப்பு, எதிரி படைகளை குறிவைத்து தாக்குதல், வான்வெளியில் பறக்கும் போது அதிவேகமாக எரிபொருள் நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை இரு நாட்டு வீரர்களும் இணைந்து மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே இந்தியா - பிரான்ஸ் ராணுவத்தின் கூட்டு போர் பயிற்சி நடைபெற்றதாக இந்திய விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:வாங்கிய கடனை திருப்பித் தராததால் மைனர் பெண் பாலியல் வன்கொடுமை.. முதியவர் கைது