கான்பூர் : உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள விமானப் படை தளத்தில் பணியாற்றும் விமானப் படை அலுவலர் ஒருவர் கடந்த சில நாள்களாக காய்ச்சலால் அவதியுற்றார்.
இதையடுத்து அவர் விமானப் படை அலுவலகத்தில் உள்ள விமானப் படை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இந்நிலையில் அவரது இரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. இதில் அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்க டெல்லியிலிருந்து நிபுணர் குழுவும் கான்பூர் சென்றுள்ளனர்.