தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆப்ரேஷன் கங்காவை வேகப்படுத்த சி-17 விமானத்தை அனுப்பும் இந்திய விமானப்படை

உக்ரைனில் உள்ள இந்தியர்களை அழைத்துவரும் பணியில், இன்று முதல் சி-17 ரக விமானம் பயன்படுத்தப்படும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

C-17 aircraft
சி-17 ரக விமானம்

By

Published : Mar 1, 2022, 6:31 PM IST

டெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை (பிப். 24) போரை தொடங்கியது. ஐந்து நாள்களை கடந்து போர் தொடர்ந்து வரும் நிலையில், ஆறாம் நாளான இன்று (மார்ச் 1) தலைநகர் கீவ்-இல் ரஷ்ய படைகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன.

கீவ் மட்டுமின்றி, அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ்விலும் ரஷ்யா கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

மேலும், உக்ரைனில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவர "ஆப்ரேஷன் கங்கா" என்ற செயல் திட்டத்தை இந்திய அரசு முன்னெடுத்துள்ளது. இச்செயல்பாடு மூலம் தற்போது வரை, ஒன்பது விமானங்கள் மூலம் 1,390 மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். மேலும், 14 ஆயிரம் மாணவர்கள் அங்கிருக்கும் நிலையில், வெளியேற்றப் பணியை துரிதப்படுத்த இந்திய விமானப்படையின் உதவியை மத்திய அரசு நாடியது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்துவரும் திட்டத்தில் இன்று முதல் சி-17 ரக விமானம் பயன்படுத்தப்பட உள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. குறைவான நேரத்தில் அதிகமானோரை நாட்டிற்கு அழைத்து வர இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உக்ரைனில் இந்தியர் பலி: மாணவரின் தந்தைக்கு ஆறுதல் கூறிய பிரதமர்

ABOUT THE AUTHOR

...view details