ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா படை விலகல் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதால், அங்கு மீண்டும் தலிபான்களின் அதிக்கம் தலைதூக்கியுள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் சொந்த நாட்டிற்கு மீட்டுச் செல்லப்படுகின்றனர்.
அங்குள்ள பெரும்பாலான ஊரகப் பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், நகர்புறங்களையும் குறிவைத்து தற்போது நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தலைநகர் காபுலை குறிவைத்து ஒவ்வொரு பிராந்தியங்களின் தலைநகரை தலிபான் கைப்பற்றத் தொடங்கியுள்ளனர்.
தற்போது மசார்-இ-ஷெரிஃப் என்ற தலைநகரை நோக்கி தலிபான்கள் நகர்ந்து வருகின்றனர். இந்நிலையில், மசார்-இ-ஷெரிப் பகுதியில் உள்ள தூதரகத்தையும் இந்தியா தற்காலிகமாக மூடியுள்ளது.