நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில், பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க படுக்கை, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடி நிலையைச் சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்களை மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில், இந்திய விமானப்படை விமானங்கள் ஒன்பது கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்கர்களை துபாய், சிங்கப்பூரிலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள பனகருக்கு நேற்று (ஏப். 27) கொண்டுவந்தன.
துபாயிலிருந்து ஆறு கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்கர்களும், சிங்கப்பூரிலிருந்து மூன்று கிரையோஜெனிக் டேங்கர்களும் சி - 17 விமானம் மூலம் பனகருக்கு கொண்டுவரப்பட்டன.
அதேபோல், இந்தூரிலிருந்து ஜாம்நகருக்கு இரண்டு கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்கரும், ஜோத்பூர், உதய்பூரிலிருந்து ஜாம்நகருக்கு இரண்டு டேங்கரும், ஹிண்டனிலிருந்து ராஞ்சிக்கு இரண்டு டேங்கரும் சி - 17 விமானம் மூலம் அனுப்பப்பட்டது.
மேலும் இந்திய விமானப்படை விமானங்கள் எட்டு கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்கர்களை ஹைதரபாத்திலிருந்து புவனேஸ்வருக்கும், இரண்டு டேங்கர்களை போபாலிலிருந்து ராஞ்சிக்கும், இரண்டு டேங்கர்களை சண்டிகரிலிருந்து ராஞ்சிக்கும் விமானம் மூலம் அனுப்பிவைத்தது.
இந்திய விமானப்படை விமானங்கள் பல காலி ஆக்சிஜன் டேங்கர்களை நாடு முழுவதும் அனுப்பிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:காலி ஆக்சிஜன் டேங்கர்களை ஏற்றிச் சென்ற விமானப்படை விமானங்கள்