தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிபிசி சோதனை: ஊடக சுதந்திரத்தை ஆதரிக்கிறோம் - அமெரிக்கா - ஊடக சுதந்திரத்தை ஆதரிக்கிறோம்

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி ஊடக நிறுவனங்களில் இரண்டாவது நாளாக இன்றும் (பிப்.15) வருமானவரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், ஊடக சுதந்திரத்தை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிபிசி அமெரிக்கா
பிபிசி அமெரிக்கா

By

Published : Feb 15, 2023, 7:33 PM IST

வாஷிங்டன்:கடந்த 2002-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பின் கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அண்மையில், பிபிசி ஊடக நிறுவனம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இந்தப் படம் நாட்டில் தேச விரோதத்தை பரப்புவதாக கூறி மத்திய அரசு தடை விதித்தது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட ஆவணப் படத்தின் லிங்கையும், முடக்கியது.

இதற்கிடையே, டெல்லி மற்றும் மும்பையில் செயல்படும் பிபிசி ஊடக நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், இரு அலுவலகங்களிலும் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 2-வது நாளாக (பிப்.15) இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஊடக சுதந்திரத்துக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், "இந்தியாவில் பிபிசி அலுவலகங்களில் நடந்து வரும் சோதனை குறித்து அறிந்தோம். உலகம் முழுவதும் நாங்கள் ஊடக சுதந்திரத்தை ஆதரிக்கிறோம்.

கருத்து சுதந்திரம், மத சுதந்திரம், மனித உரிமைகள் ஆகியவை உலகம் முழுவதும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என நம்புகிறோம். இந்த உலகளாவிய உரிமைகள் தான் ஜனநாயகத்தின் அடித்தளம்" எனக் கூறினார்.

பிபிசி அலுவலகத்தில் நடந்து வரும் சோதனை ஜனநாயகத்துக்கு எதிரானது என நினைக்கிறீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அதைப் பற்றி என்னால் கூற முடியாது. சோதனை நடப்பது குறித்த தகவலை மட்டுமே நாங்கள் அறிவோம். ஆனால், நான் தீர்ப்பு அளிக்கும் அதிகாரத்தில் இல்லை" என்றார்.

இதையும் படிங்க: தனியார் மருத்துவமனை மோகத்தை குறைக்க அரசு 'பே வார்டுகள்': மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details