அதில், எனக்கு துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பளித்த மத்திய அரசுக்கு நன்றி. புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக அரசியலமைப்புக்கு உட்பட்டு தார்மீக அடிப்படையில் எனது கடமையை செய்தேன்.
அரசியலமைப்பு பணிகளை அப்பழுக்கற்ற வகையில் சிறப்பாக செய்தேன் - கிரண்பேடி - புதுச்சேரிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது
![அரசியலமைப்பு பணிகளை அப்பழுக்கற்ற வகையில் சிறப்பாக செய்தேன் - கிரண்பேடி கிரண்பேடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10657639-thumbnail-3x2-new.jpg)
08:45 February 17
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், கிரண்பேடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது, அது தற்போது மக்களின் கைகளில்தான் இருக்கிறது. எனது அரசியலமைப்பு பணிகளை அப்பழுக்கற்ற வகையில் சிறப்பாக செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில், ஆளுநர் பதவியில் இருந்து கிரண்பேடியை விடுவித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டார். அவருக்கு பதில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிரண்பேடி நீக்கப்பட்டதற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வரவேற்றுள்ளார். காங்கிரஸ் தொண்டர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.