தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விமர்சனங்களை பெரிதும் மதிப்பவன் நான் - பிரதமர் மோடி - விமர்சனம் குறித்து மோடி

நல்ல நோக்கத்துடன் கூடிய விமர்சனங்களை மனமார வரவேற்பவன் நான் எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

By

Published : Oct 2, 2021, 3:50 PM IST

Updated : Oct 2, 2021, 5:07 PM IST

பிரதமர் நரேந்திர மோடி ஓபன் என்ற நாளிதழுக்கு விரிவான பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் மோடி கூறிய முக்கிய கருத்துக்கள் பின்வருமாறு:

"அரசாங்கம் என்பது நாட்டை கட்டமைக்கும் நோக்கில் செயல்பட வேண்டுமே தவிர, அடுத்து மீண்டும் ஆட்சியைக் கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படக்கூடாது. எனவே, நான் திறந்த மனதுடன் விமர்சனங்களை வரவேற்கிறேன்.

ஆக்கப்பூர்வமான விமர்சனம் தேவை

என்னை மேம்படுத்திக்கொள்வதற்கு விமர்சனம் என்பது முக்கியம் எனக் கருதுபவன் நான். ஆனால், விமர்சகர்கள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளார்கள். அது வருந்தத்தக்கது.

பொரும்பாலானோர் குற்றச்சாட்டை முன்வைத்து கருத்துருவாக்கம் செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கும் காரணம் உண்டு, விமர்சனத்திற்கு கடுமையான உழைப்பு, ஆய்வு தேவை. ஆனால், இன்றைய வேகமான உலகில் நேரம் செலவிட பலர் தயாராக இல்லை. எனவே, பல நேரங்களில் நல்ல விமர்சகர்கள் இல்லையே என வருந்தியுள்ளேன்.

நாட்டை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே நான் அரசை வழிநடத்துகிறேன். கடந்த சில நாள்களுக்கு முன், நமது ஒலிம்பிக், பாரலிம்பிக் வீரர்களுடன் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடனான சந்திப்பு எனக்கு புத்துணர்ச்சியை அளித்தது.

சுகாதார கட்டமைப்பு மேம்பாடு

கரோனா பெருந்தொற்று நாட்டின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற உணர்வை அனைவரிடமும் கொண்டு சேர்த்துள்ளது. கடந்த ஏழாண்டுகளில் நாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை ஆறிலிந்து 22 ஆக உயர்ந்துள்ளது. 380 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகள் 560 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் 82 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது ஒரு லட்சத்து 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டது. இதை உணர்ந்தும் பலர் அரசியல் லாபத்திற்காக சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாட்டை மேற்கொள்கிறார்கள்" என்றார்.

இதையும் படிங்க:இந்தியாவில் 20.7 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் தடை!

Last Updated : Oct 2, 2021, 5:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details