டெல்லி: இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் இன்று (ஏப்ரல் 5) நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் பொது திட்டங்களை பற்றி பொய்யான தகவல்களை பரப்பியதாக 22 யூ-ட்யூப் சேனல்களை தடைசெய்துள்ளது. இதில் 4 பாகிஸ்தான் சேனல்களும் அடங்கும். மூன்று ட்விட்டர் கணக்குகள் மற்றும் ஒரு ஃபேஸ்புக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2021 முதல், தேசியப்பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாடு, பொது ஒழுங்கு குறித்த சட்டத்தின் அடிப்படையில் இந்த சேனல்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், 'தடைசெய்யப்பட்ட யூ-ட்யூப் சேனல்கள் இந்திய ராணுவம் , ஜம்மு-காஷ்மீர் குறித்த தவறான தகவல்களை பரப்பியுள்ளன. இந்த சேனல்களுக்கு 260 கோடி பார்வையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.