தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொலைக்காட்சி விளம்பரங்கள்! - மத்திய அரசு அறிவுறுத்தல்! - இந்திய விளம்பர தர நிர்ணயக் கவுன்சில்

டெல்லி: சட்டத்திற்கு புறம்பான அல்லது தடை செய்யப்பட்ட எவற்றையும் விளம்பரங்கள் ஊக்குவிக்கவில்லை என்பதை அனைத்து தொலைக்காட்சிகளும் உறுதிபடுத்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ministry
ministry

By

Published : Dec 5, 2020, 9:00 AM IST

இது தொடர்பாக அனைத்து தனியார் தொலைக்காட்சிகளுக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அனுப்பியுள்ள அறிவுறுத்தல் கடிதத்தில், “ தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் விளம்பரங்கள் பல, ஆன்லைன் கேமிங், கற்பனை விளையாட்டு போன்றவை தொடர்புடையதாகவே இருப்பதாக அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. அத்தகைய விளம்பரங்கள் பார்ப்போரை தவறாக வழிநடத்துவதுடன், அதனுடன் தொடர்புடைய நிதி மற்றும் அபாயங்களை நுகர்வோருக்கு சரியாக தெரிவிப்பதில்லை என்று தோன்றுகிறது.

மேலும், அவை தொலைக்காட்சிகள் ஒழுங்குமுறை சட்டம் 1995 மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 ஆகியவற்றின் விளம்பர நெறிமுறைகளுடன் சற்றும் இணங்காமல் உள்ளது.

கடந்த மாதம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஒரு விளம்பரதாரர் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி, அதில் இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில், செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம், இந்திய ஒலிபரப்பு அறக்கட்டளை, அகில இந்திய கேமிங் கூட்டமைப்பு, இந்திய பேண்டஸி விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் ஆன்லைன் ரம்மி கூட்டமைப்பு ஆகியவை கலந்து கொண்டன.

அக்கூட்டத்தின் ஆலோசனைக்குப்பின், நுகர்வோரை பாதுகாக்கும் வகையிலும், விளம்பரங்கள் வெளிப்படையானவை என்பதை உறுதிபடுத்தும் வகையிலும், விளம்பரதாரர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களின் நலனுக்காக இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் பொருத்தமான வழிகாட்டுதலை வெளியிட முடிவு செய்யப்பட்டது.

எனவே, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படும் விளம்பரங்கள் அனைத்தும், இந்திய விளம்பர தர நிர்ணயக் கவுன்சில் வழிகாட்டுதலின்படியே அமைந்திருக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பான அல்லது தடை செய்யப்பட்ட எவற்றையும் விளம்பரங்கள் ஊக்குவிக்கவில்லை என்பதையும் தொலைக்காட்சிகள் உறுதிபடுத்த வேண்டும்.

இதையும் படிங்க: ஆண், பெண் குரலில் பாடும் கன்னட குயில்!

ABOUT THE AUTHOR

...view details